சுற்றுவட்டாரப்பகுதியின் வளம், நீர்வளம், மண்வளம், நகரின் தேவையை நிறைவேற்றக்கூடிய விவசாய உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய பல காரணிகள் ஒரு நகரின் வளர்ச்சியை தீர்மாணிக்கின்றன. இன்று ஒருவழிப்பாதையாக பல சாலைகள் இருக்க காரணமே தொலைநோக்கற்ற தனியார் வசம் ரியல் எஸ்டேட் திறை சென்றதுதான்.
(எ.கா.) அன்று பல்லடம் தொகுதியில் ஒரு சிறு கிராமமாய் இருந்த
திருப்பூருக்கு, 25 அடி சாலை விஸ்தாரமானதாய் இருந்திருக்கலாம். அன்று அரசு
கோட்டைவிட்டதின் விளைவு, இன்று மாவட்ட தலைநகராய், மாநகராய்
விரிந்திருக்கக்கூடிய திருப்பூரின் போக்குவரத்து நெரிசல், பூங்கா போன்ற
மகிழ்விடங்களின் பற்றாக்குறை, நிழல் மரங்கள் இல்லாமை, கழிவுநீர் மேலாண்மை
இல்லாமை போன்ற பல சிக்கல்களில் சிக்கித்தவிக்கிறது.
இதுவே, அரசாங்கம் முன்நின்று செய்திருந்தால், இச்சிக்கல் தவிர்க்கப்பட்டிருக்கும்.
அதேசமயம், அரசாங்கத்தின் கையில் ரியல் எஸ்டேட் இருந்தால், இடம் விற்பவருக்கும் இலாபம், வாங்குபவருக்கும் இலாபம், கருப்புபண பதுக்கல் போன்றவற்றின் மூலம் அரசு இழக்கும் வரியும் தவிர்க்கப்படும்.
விழிக்குமா அரசு?