Sunday, April 16, 2017

Shouldn't We Deserve More?



No doubt there is democracy in India. Such thing can be proved many times over with prominent incidents – a most prominent leader losing an election, a Prime Minister getting disqualified by Courts for the allegation over tampered election, an independent legislator becoming Chief Minister and a tea maker becoming Prime Minister. But the quality of democracy we are enjoying is menial compared to what is promised and what is expected. Remember! Indian democracy is not fully representative! You need just one more elector than the second placed candidate to enter the house of law makers. 



The most important thing people expect is that their voice should be heard to the person who is sitting at the top on behalf of them. But that remains a distant dream with sporadic incidents of democracy thanks to the public, court and the media. MPs expecting bribe to raise his people’s voice inside the Parliament is an utter shame to our democracy. Biased media, corrupt judges and bureaucrats are deterring the reach of democracy. Common people should be hold equally responsible for being in a state of ignorance and self-centred.
Political parties are existing in this land because of democratic style of constitution. Yet, one must ponder over the same when it comes to intra-party democracy. Raise an alternative view; sure you would get cornered or expelled from the party. This is the state of all political parties in India. Even Sadder is the fact that many parties don’t find leaders outside certain families. From national parties to regional parties, leaders are no indifferent to nepotism. It is absurd that leaders have failed to cultivate leadership outside their families, a failure they are always reluctant to accept.


Our style of elections is equally contributing in cultivating examples of menial democracy. A candidate who had failed to win an election to House of Commons can still hover over and rule the same people who had no confidence in him – thanks to democracy and House of Elders! More sorrow is the fact that Prime Ministerial and Chief Ministerial candidates are allowed to contest in more than one constituency. Why such fearful and power thirsty are allowed is a question I ask myself over and over! Another comic act is that, people representatives (MPs, MLAs, MLCs, and Mayors) are allowed to contest in elections without tendering their resignation letter. Shouldn’t they get auto-disqualified over their application for second representation?
To attain the top post in India, except for family businesses and politics, you are expected of experience. Without having the experience of governing a district, or a state you can govern the whole country. There is no sequence of promotions to the top job. More bizarre is people have no or very little say about the person who is going to be a PM or a CM. A person who lost elections, without getting elected can still become PM or CM. All he/she need is the required number of representatives in the pocket.

Most importantly, what is the purpose of barring people only for certain period from contesting after getting convicted of criminal charges? Why can’t we bar them for life? When they are given preferences in all aspects of life, Shouldn’t the politicians, judges, police and bureaucrats be given twice the amount of punishment reserved for common? Shouldn’t the government confiscate all their extra constitutionally acquired properties and properties worth one time over as penalties? 

In spite of such other questions and ponderings, I am proud to be called an Indian and happy to be a person enjoying the degree of democracy of the land. It is said that “One shall get what oneself deserves”! Shouldn’t we deserve more for being Indians? Hoping for more!

Thursday, December 22, 2016

ரியல் எஸ்டேட் வீழ்ச்சி நல்லதே!

ரியல் எஸ்டேட் வீழ்ச்சி என்பது தற்கால சூழ்லில் வரவேற்கப்படவேண்டிய ஒன்றே. ஒரு நகர் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்னும் தேவையை அரசு நிரவாகத்தைத்தவிர பிறர் அறிந்திருத்தல் அரிதே. அடுத்த 10, 20, 50 வருடங்களில் அதன் வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்னும் கணிப்பு, அரசு ஆவணங்களின் மூலமே சாத்தியம். தனியாரும் தங்கள் அறிவைக்கொண்டு நகர் நிர்மாணத்திற்கு உதவலாம்.

சுற்றுவட்டாரப்பகுதியின் வளம், நீர்வளம், மண்வளம், நகரின் தேவையை நிறைவேற்றக்கூடிய விவசாய உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய பல காரணிகள் ஒரு நகரின் வளர்ச்சியை தீர்மாணிக்கின்றன. இன்று ஒருவழிப்பாதையாக பல சாலைகள் இருக்க காரணமே தொலைநோக்கற்ற தனியார் வசம் ரியல் எஸ்டேட் திறை சென்றதுதான்.

(எ.கா.) அன்று பல்லடம் தொகுதியில் ஒரு சிறு கிராமமாய் இருந்த திருப்பூருக்கு, 25 அடி சாலை விஸ்தாரமானதாய் இருந்திருக்கலாம். அன்று அரசு கோட்டைவிட்டதின் விளைவு, இன்று மாவட்ட தலைநகராய், மாநகராய் விரிந்திருக்கக்கூடிய திருப்பூரின் போக்குவரத்து நெரிசல், பூங்கா போன்ற மகிழ்விடங்களின் பற்றாக்குறை, நிழல் மரங்கள் இல்லாமை, கழிவுநீர் மேலாண்மை இல்லாமை போன்ற பல சிக்கல்களில் சிக்கித்தவிக்கிறது.
இதுவே, அரசாங்கம் முன்நின்று செய்திருந்தால், இச்சிக்கல் தவிர்க்கப்பட்டிருக்கும்.

அதேசமயம், அரசாங்கத்தின் கையில் ரியல் எஸ்டேட் இருந்தால், இடம் விற்பவருக்கும் இலாபம், வாங்குபவருக்கும் இலாபம், கருப்புபண பதுக்கல் போன்றவற்றின் மூலம் அரசு இழக்கும் வரியும் தவிர்க்கப்படும்.
விழிக்குமா அரசு?

Friday, August 19, 2016

சிமியோன் மனுவேல்


நேற்று நடந்த 100 மீட்டர் பிரிஸ்டைல் நீச்சல் போட்டியில், நீச்சல் வீராங்கனை சிமியோன் மனுவேல், தங்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். இலக்கினை 52.70 விநாடிகளில் கடந்த பிறகு தங்கத்தை வென்ற பின் சக நாட்டு வீராங்கனையை கட்டிப்பிடித்து சிமியோன் அழுத புகைப்படம், உலகையே உருக வைத்துள்ளது. சிமியோனின் அழுகைக்கு பின்னால் அத்தனை சோகம் அடங்கியிருக்கிறது. இந்த போட்டியில் கனடா நாட்டை சேர்ந்த வீராங்கனை இவருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டார்.

கடந்த 1960ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பொது நீச்சல் குளங்களில் குளிக்கக் கூடாது. பொதுக்குளங்கள், ஏரிகளிலும் குளிக்க முடியாது. ஏதாவது நீச்சல் குளத்தில் கறுப்பின மக்கள் குளித்துக் கொண்டிருந்தால், அங்கு வரும் மற்றவர்கள் முதலில் அவர்களை வெளியேறச் சொல்வார்கள். கறுப்பின பிரபலங்களும் கூட அத்தகைய நெருக்கடியை சந்தித்துள்ளனர். கடந்த 1953 ம் ஆண்டு லாஸ் வேகாஸ் ஹோட்டல் ஒன்றில், சினிமா நடிகர் டரோத்தி டேன்ட்ரிட்ஜினின் கால் தண்ணீரில் பட்டதால், அந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. 

1964 ம் ஆண்டு பிரபல பாடகரும் நடனக் கலைஞருமான சம்மி டேவிஸ் ஜுனியர், புளோரிடாவில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்ததால், அவர் குளித்து முடித்ததும் தண்ணீர் வெளியே திறந்து விடப்பட்டது. அமெரிக்காவில் சம உரிமை கோரி கறுப்பின மக்கள் போரடிய காலகட்டத்தில், செயின்ட் அகஸ்ட்டின் நகரில், கறுப்பினத்தவர் குளித்த நீச்சல் குளங்களில் ஆசிட் கலக்கப்பட்ட சம்பவம் கூட நடந்துள்ளது.


சிமியோனின் முன்னோர்கள் அவ்வளவு நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அத்தகைய சமூகத்தில் பிறந்து இன்று நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சிமியோன்.

நன்றி : விகடன்


இரட்டை வேடம்பூனும் வி.சி.க.

இந்துத்துவ எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருகிறேன் என்று வி.சி.க. பொதுச் செயலாளர் ரவிக்குமார் கூறியுள்ளார். வி.சி.க. இந்துத்துவ எதிர்ப்பு அரசியலில் ஈடுபடுகிறதா இல்லை மதவாத எதிர்ப்பு அரசியலில் ஈடுபடுகிறதா என்று விளக்க வேண்டும்.

தலித் முன்னேற்ற அரசியல் என்பதைத்தாண்டி, பிற சமூகத்தினரின் எதிர்ப்பு அரசியல் என்பதில் வி.சி.க. தீவிரமாக இறங்கியுள்ளது. அரசியல் இலாபத்திற்காக இளைஞர்களைத் தூண்டிவிடும் சில‌ சமூக அமைப்புகளின் பட்டியலில் வி.சி.க. இணைந்து பல காலம் ஆகிவிட்டது. தலித் முன்னேற்றம் என்னும் பெயரில் தன் பொறுப்பற்ற பேச்சினால் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் வேலையை வி.சி.க. நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஏன் ஜக்கிக்கும் யோகாவுக்கும் இந்து சாயம் பூசப்படுகிறது?

சித்த மருத்துவமும் யோகாவும் இந்த மண்ணின் கலை. அதற்கு மதச்சாயம் தேவையில்லை. மோடியும் உலக யோகா தினத்தில் இதையேதான் சொன்னார். உண்மை!

இன்று ஈஷா ஒரு விவாதப்பொருளான பிறகு மட்டும் ஏன் ஜக்கிக்கும் யோகாவுக்கும் இந்து சாயம் பூசப்படுகிறது?

பனை



பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம் என்பதைத்தாண்டி நாம் அதனை பாதுகாக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் பற்பல. வெள்ளம், வறட்சி போன்ற பல இயற்கை இடர்பாடுகளையும் தாண்டி வளரக்கூடியது பனை.
பனம்பழக்கூல், தெழுவு, நீரா, கள் போன்ற பானங்களும், நுங்கு, கருப்பட்டி, சக்கரை, சோறு போன்ற உன்னத்தகுந்த உன்னத பொருட்களும், ஓலை, விட்டத்திற்கான மரங்கள் போன்ற‌ கட்டுமான பொருட்களாகவும் பயன்படுகின்றன. பனம்பட்டை, பனம்புரடை என கிராம மக்களின் எரிபொருள் தோவைக்காகவும் பனை பயன்படுகிறது. பனைங்கிழங்கு, சீம்பு, சேவாக்காய் என கிட்டத்தட்ட அனைத்து பருவங்களிலும் ஏதாவது ஒரு பொருளை மனிதனுக்கோ அல்லது பிற உயிரினங்களுக்கோ கொடுத்துக்கொண்டே இருக்கிறது.
கால்நடைகளுக்கு கூலாகவும், பறவைகளுக்கு வீடாகவும் வாழ்கிறது பனை.
வருடம் முழுவதும் நிழல் என்பது இதன் மிகப்பெரும் கொடை. இவை அனைத்திற்கும் பனை பிற மரங்களைப்போன்று மனிதனிடம் எதிர்பார்ப்பது ஒன்றும் இல்லை. தென்னைக்கு நிகராக அனைத்தையும் தரும் பனைக்கு நீர் பாசனம் தேவையில்லை. மழை நீரை மட்டுமே கொண்டு வாழும் தன்மை கொண்டது.
"பனமரமே (பனைமரமே) காஞ்சு போச்சு" என்னும் சொல்லாடல் இன்றும் கொங்கு வட்டாரங்களில் மழையின் அளவையும், வறட்சின் கோரதாண்டவத்தையும் குறிக்கும் பதமாக உள்ளது.
இவ்வாறான‌ பனை, கடந்த சில தலைமுறைகளாக பெரும் அழிவை சந்தித்து வருகிறது. மரபு வீடுகளின் கட்டுமானம் அற்றுப்போய்விட்டதாலும், நுங்கைத்தவிர அதன் பிற பொருட்களை இன்றைய மக்கள் நாகரீகக்குறைச்சலாக கருதுவதாலும் பனை மரங்களின் எண்ணிக்கை பாதாளத்தை நோக்கிச்சென்று கொண்டுருக்கிறது.
பனையை தக்க வைக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் நான் எங்கள் தோட்டத்தில் அடுத்த மூன்று வருடங்களில் 30 பனையையாவது நட்டு வளர்க்க வேண்டும் என் நினைத்திருக்கிறேன். முதல் கட்டமாக 20 பனம்பழங்களை முளைக்கவைக்க அதன் கொட்டைகளை விதைத்துள்ளேன்.
பனங்கிழங்கு, சீம்பு பொன்றவற்றிற்கான பனம்பழ சேகரிப்பில் தற்போது ஈடுபட்டுள்ளேன். முதல் கட்டமாக 200 பனங்கிழங்கை உருவாக்க பனங்கொட்டைகளை விதைத்துள்ளேன். சீம்பிற்கான விதை சேகரிப்பு தொடர்கிறது.



Friday, July 22, 2016

Dear BCCI, Give Equal Opportunities!



What is the purpose of one state having more than one membership while few states having none?

BCCI should be equally represented, irrespective of population and area of its member states. One can counter this argument by saying that bigger states like Maharashtra cannot be equated with states like Manipur or Nagaland. Maharashtra produced many legends where as people from North East hardly have place in Indian Team. Yes! It is true. But we can’t neglect them. An elevation may change things. If they have equal voice in the board, smaller states can develop their sporting infrastructure and can host many international matches which would draw more crowds thereby popularizing the sport in the area.



Also, if one has to go by the “representation with respect to population” policy, states like Uttar Pradesh and Madhya Pradesh has to be given more membership than states like Gujarat which enjoys three permanent memberships. It is equally sad to see Bihar Cricket Association in affiliate member category. Considering the population of larger states, and hence the potential, if trained properly, to produce more cricketers is being undermined by lack of support.

How do sports grow? For any region to produce good players first its population has to be exposed to that sport. Television, radio and newspapers play a crucial role in exposing its audience and readers. Secondly, the population must have a good infrastructure to host such a sport and by which one can draw crowd who would be emphatic to see its sporting icons play in front of them. By this time, that region would be having aspiring young guns and next step would be tapping their potential and grooming them, which can be done by establishing coaching facilities. The final step is, exposing those young lads to professional sports.

India is a behemoth in Cricket – a strong fan base equally supported by revenues. More talents would come to limelight only if their voices are heard and requirements are met. Elevating affiliate state associations would do a huge favour for the aspiring sportsperson from that region in particular and the sport in general.

Every touring nation that comes to India has to play in the Maharashtra or Gujarat because of their clout in the BCCI. It is great for the fans in these states, but will this serve cricket in India? My answer is no.

Give equal opportunities.