Thursday, December 22, 2011

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?

௧. கல்வி
௨. அறிவு
௩. ஆயுள்
௪. ஆற்றல்
௫. இளமை
௬. துணிவு
௭. பெருமை
௮. பொன்
௯. பொருள்
௧0. புகழ்
௧௧. நிலம்
௧௨. நன்மக்கள்
௧௩. நல்லொழுக்கம்
௧௪. நோயின்மை
௧௫. முயற்சி
௧௬. வெற்றி

----------------------------------------------------
கலையாத கல்வி
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்

அன்பான துணை
தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தடையற்ற கொடை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா வாழ்வு

Monday, December 12, 2011

அவள் இல்லாத நொடி


அவள் இல்லாத நொடிகளைக் கடக்க
முள்ளுக்கும் வலிக்கிறது போலும்
மெதுவாய் நகர்கிறது...

அவள்...


மகிழ்ச்சிக்கும் துக்கத்திற்க்கும்
ஒரு வித்தியாசம்தான்.
அவள்...

கை கொடு


உன் நினைவுகளில்
மூழ்குகிறேன்
காப்பாற்ற கைகொடுப்பாய்
என்று...

இயற்கையின் பதில்


இயற்கையை வென்றுவிட்டோம்
என்று நினைக்கும் நொடிப்பொழுதில்
இல்லையென்று தன் சீற்றத்தால்
பதில் அளிக்கிறாள் இயற்கை...

தோழி...


பிறந்தது முதல்
ஒன்றாய்த்தான் திரிந்தோம்
நான் அரிசி கொண்டுவர‌
அவள் பருப்பு கொண்டுவந்தாள்
கூட்டாஞ்சோறு ஆக்கினோம்
மா கொய்யா
சப்போட்டா என்று
இருவரும் சேர்ந்து
திருடாத கனியுமில்லை
தோட்டமும் இல்லை
ஏனோ வரவில்லை
இரண்டு நாட்களாய்
விசாரிக்க அவள்
இல்லம் சென்றேன்
இனிமேல் விளையாட‌
வரமாட்டாள் என்றாள்
அவளின் அம்மா
அடுத்த வாரம் அவளுக்கு
நன்னீராட்டு விழாவாம்...

சுவைக்காத ஆப்பிள்




அணில் தின்றுவிட்டுப் போட்ட
கொய்யாப்பழத்தின் சுவை ஏனோ
ஏசி பழமுதிர் சோலையில்
பளபளப்பாய் மிண்ணும்
ஆப்பிளில் கிடைப்பதில்லை...