Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, May 26, 2016

தமிழகமும் நலத்திட்டங்களும்

பொதுவாக, மக்களுக்கான நலத் திட்டங்களை அரசு அறிவிக்கும்போதெல்லாம் அதைப் பொருளாதார இழப்பாகக் கணக்கிட்டுக் காட்டி, வாதம் செய்வது இயல்பு. அது ஒரு மேட்டிமைத்தனமான பார்வைதான். இந்த விஷயத்தில் தமிழகம் எப்போதுமே விமர்சனங்களைப் பொருட்படுத்தாத, இன்னும் சொல்லப்போனால் ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக இருந்துவருகிறது. ஒரே விஷயம் அரசு நினைவில் கொள்ள வேண்டியது, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளிப்பது பிரச்சினை அல்ல; அதற்கான நிதியாதாரத்தை உருவாக்குவதும் மேம்படுத்துவதும் தக்கவைப்பதுமே சவால்கள்.

தமிழகத்தைப் பொறுத்த அளவில் நிதியாதாரத்தைப் பெருக்குவதற்கான ஆதாரங்களுக்கு குறைவு இல்லை. தொடர்ந்து வருவாய்ப் பெருக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவே. இதுவரை தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளுக்கான நிதியாதாரங்களில் ஒன்றாக டாஸ்மாக் வருமானம் இருந்திருக்கிறது. இப்போது படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டுவரவுள்ள சூழலில், புதிய நிதியாதாரங்களை அரசு கண்டறிந்து, அவற்றிலிருந்து வருவாயைப் பெருக்க வேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்ற சூட்டோடு சூடாக இதே வேகத்தில் தொழில் துறையை அரசு முடுக்கிவிட வேண்டும்.

நன்றி : தமிழ் இந்து

குற்றமில்லா இந்தியா

தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் 2014 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் மொத்தம், 1387 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் மொத்தம் 4,18, 536 கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த  சிறைச்சாலைகளில் மொத்தம் 3,56,561 பேர்தான் தங்கமுடியும். அதாவது 100 பேர் இருக்கவேண்டிய இடத்தில் 117.4 கைதிகள் இருக்கிறார்கள். இதில் தண்டனைக் கைதிகளைவிட, விசாரணைக் கைதிகள்தான் அதிகம். 2,82, 879 (67.58%) பேர் விசாரணைக் கைதிகள்.

தண்டனை பெற்றவர்களில் அனேகம் பேர் சமூகத்தாலோ, பொருளாதாரத்தாலோ தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். 70% சிறைவாசிகள் படிப்பறிவில்லாதவர்கள். ஜாமீன் கிடைத்தும் ஜாமீன் தொகை கட்டமுடியாமல் சிறையில் இருக்கும் அனைவருமே சமூகத்தால் தாழ்த்தப்பட்டவர்கள்தான். விசாரணைக் கைதிகளின் நிலைமையோ படுமோசம். தங்களின் உரிமைகள் என்ன என்பதைக்கூட அறியாமல், ஒரு வழக்குறைஞர் வைத்து வாதாட பணமில்லாமல் வாடுகிறார்கள்.

சிறைவாசிகளின் குறைவால் சிறைகளை மூடிக்கொண்டுவரும் நெதர்லாந்து நமக்கு சொல்லும் பாடம் என்ன? தண்டனைகள் மூலமாக மட்டும் குற்றங்களை குறைத்துவிட முடியாது. நாம், உண்மையாக குற்றங்கள் குறைய வேண்டும் என்று விரும்புவோமாயின், இங்கு இல்லாமை இல்லாத நிலையும், அனைவரும் சமம் என்னும் நிலையையும் உருவாக்க வேண்டும். சிறைச்சாலைகள் குற்றம்செய்தவர் திருந்தவே என்னும் மனநிலையும், அதற்கான சட்டமும் இங்கு வரும்வரை நெதர்லாந்தை எண்ணி பெருமூச்சை மட்டுமே விடமுடியும்...

Tuesday, May 10, 2016

நுகர்வு என்பது எவ்வாறாக இருத்தல் வேண்டும்?

இன்று மானுடம் சந்திக்கும் பல சிக்கல்களுக்குக் காரணமாய் இருப்பது தேவையற்ற நுகர்வு. ஒரு உயிர் மட்டத்தின் எச்சம்மும், கழிவும் அடுத்த நிலையில் இருக்கும் உயிர்களுக்கு உணவாகின்றது. எடுத்துக்காட்டாக, பசுவின் சாணம், சாணி வண்டிற்கு உரமாகிறது. தேவையற்ற நுகர்வின் போது, அடுத்த நிலைக்குச் செல்லவேண்டிய ஒரு வளம், முன்னத்திய நிலையிலேயே தங்கிவிடுகிறது. இது தேங்கத்தேங்க இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், மீண்டும் இழந்த சமநிலையை சரிசெய்ய இயற்கை தன் வேலையைத் தொடங்கும். நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவையெல்லம் இயற்கை சமநிலையை உண்டாக்கப் பயன்படுத்தும் கருவிகள் தான். தேவையற்ற நுகர்வின் போது, சுற்றுப்புறத் தூய்மைக் கேடும் ஏற்படுகிறது.

எனவே, நுகர்வு என்பது இயற்கையை ஒட்டியதாக இருத்தல் வேண்டும். நமது எச்சமும், கழிவும் அடுத்த நிலைக்கு உணவாகவோ, பயனுள்ளதாகவோ இருத்தல் வேண்டும். நமது நுகர்வு சகஉயிரின் உரிமையையோ அடுத்தநிலையின் உணவையோ பறிப்பதாக இருக்கக் கூடாது...

Tuesday, April 26, 2016

இந்தியாவின் தண்ணீர் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?


நாம் தீர்விலிருந்து பல மைல் தூரம் வந்துவிட்டோம். அதுமட்டுமல்லாமல், மேலும் தவறான பாதையிலேயே செல்கிறோம். இது மராட்டிய மாநிலத்துக்கான பிரச்னை மட்டுமல்ல. மொத்த இந்தியாவிற்குமானது. ஆம், நாம் நீரை சேமிக்கும் வழிகளை ஆராயாமல். அதை மேலும் மேலும் சுரண்டும் வழிகளையே தேடுகிறோம். எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட தொழிற்நுட்பத்தின் மூலம் இந்தியா 24 மணி நேரமும் 23 மில்லியன் ஆழ்துளைக் கிணறுகளை இயக்கி கொண்டிருக்கிறது. இது தற்காலிகமான தீர்வுகளை வேண்டுமானால் தரலாம். ஆனால், நிரந்திர தீர்வை தராது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும், ஒரு தீர்வல்ல என்கிறார் ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் எழுத்தாளர் ஜான் ஆர்ச்சர். குடிநீராக்கப்பட்ட ஒரு லிட்டர் கடல் நீர் மீண்டும் கடலுக்கு ஒரு லிட்டர் விஷத்தை அனுப்புகிறது என்கிறார் ஆர்ச்சர். அது மட்டுமல்லாமல், இதற்கு அதிக மின்சாரம் தேவை. இது சூழலுக்கு கேடு விளைவிப்பதாகவே இருக்கிறது. ஆக, இதுவும் நிரந்தர தீர்வல்ல


தண்ணீர், மக்களின் அடிப்படை தேவைக்கானதைவிடவும், அதிகமாக தொழிற்சாலைக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்கள் எதுவும் நம் அடிப்படை தேவைக்கானதல்ல. ஆடம்பரத்துக்கானது.

சரி என்னதான் தீர்வு...? நுகர்வை குறைப்பது. நுகர்வை குறைப்பதன் மூலம் தேவையற்ற உற்பத்தியை குறைப்பது. சூழலை கெடுக்கும் தொழிற்சாலைகளை மூடவைப்பது. இது மட்டும்தான் தீர்வு. தவறுவோமானால், எதிர்காலம் மோசமானதாக இருக்கும். நீங்கள் பிள்ளைகளுக்கு பணம் சேர்த்து வைத்திருக்கலாம். ஆனால் குடிக்க தண்ணீர் இருக்காது. இது ஏதோ பக்கத்து மாநில பிரச்னை என்று நினைக்காதீர்கள். மராட்டியமும், மத்திய பிரதேசமும் நமக்கு அடிக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி.

விழிப்போம். திசையை மாற்றுவோம். தீர்வை நோக்கி நடப்போம்.

நன்றி : விகடன்

ஏ.சி என்பது ஆறுதலாக இருக்கலாமே ஒழிய, மருந்தல்ல...

கோடையின் முதல் அறிகுறியில் நம் மக்களின் ஏ.சி ஷோரூம் படையெடுப்பு துவங்குகிறது. அதாவது, கோடை அனல் என்னும் பிரச்சனையை சமாளிக்க ஏ.சி என்னும் ஆறுதல் மருந்து தேவைப்படுகிறது. மருந்தின் பக்கவிளைவாக, அடுத்த கோடை மேலும் உக்கிரமாகிறது. காரணம் ஏ.சியின் காரணமாக வெளியாகும் ஓசோன் அழிப்பான்களும் பசுமைகுடில் வாயுக்களும்.

நமது அடுத்தகட்ட நகர்வு என்பது நோய்க்கான ஆறுதல் மருந்தாக இருக்கக்கூடாது. அது நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவதாக இருக்க வேண்டும். வெப்பத்தின் கடுமைக்குக் காரணம் மரமும், தூய காற்றும், காற்றோட்டமும் இல்லாததே ஆகும். நல்ல காற்றோட்டம் உள்ள, மரங்கள் நிறைந்த வீட்டில் கோடையின் கனல் தகிப்பதிலை. மரம் மழையை மட்டுமல்ல, குளுமையையும் தருகிறது.

ஏ.சி என்பது ஆறுதலாக இருக்கலாமே ஒழிய, மருந்தல்ல...

Tuesday, April 19, 2016

படித்ததில் பிடித்தது


நாம் எப்போதும் உண்மையை சந்திக்க தயங்குகிறோம். அந்த உண்மையை சந்திக்கும் பண்பு, நம் சிறு வயதிலிருந்தே துவங்கி விடுகிறது. தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் நாள் இன்னும் தள்ளிப் போகாதா என்று ஏங்குவது, விடுமுறையை கொண்டாட மட்டுமல்ல... விடைத்தாளை சந்திக்கவும் பயந்துதான்.

அதே பண்புதான் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது. முகத்தில் அறைந்தாற்போல் உண்மையை பேசுபவர்களை நமக்கு பிடிப்பதில்லை. இது தனி மனிதனின் குணம் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின், தேசத்தின் குணமாகவும் இதுதான் இருக்கிறது. தம் தேசத்திற்கு எதிராக யாராவது சுடும் உண்மையை பேசினால், அவர் மீது தேச விரோத முத்திரை குத்தப்பட்டு, விலக்கி வைக்கப்படுகிறார்.

Tuesday, March 08, 2016

தோனியின் தலையும், நாகரீகத்தின் நிலையும்!!!


தோனியின் தலையும், நாகரீகத்தின் நிலையும்!!!

வெற்றிபெற்ற நாட்டின் வீரர்கள், தோல்வியடைந்த நாட்டின் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது என்பது வரலாற்று பக்கங்களில் காணப்பட்ட ஒன்று. உடமைகளாகப் பார்க்கப்பட்ட பெண்கள், தங்களின் உழைப்பாலும் சில முற்போக்குவாதிகளின் சிந்தனைகளாலும் செயல்களாலும், இன்று பாலியல் சமத்துவத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்.

ஏதோ ஒரு வங்காள தேசத்தவன், தன் அறிவிழந்து செய்த செயலுக்காக, அந்நாட்டின் பெண்கள் மீது இணைய வழியாக வரம்பு மீறுவது எவ்வளவு பெரிய அநாகரீகமான செயல்? வெற்றி பெற்ற போர்வீரர்கள் அன்று நிகழ்த்திய வெறியாட்டத்துக்கும், இன்று வக்கிர உணர்வுடன் நாம் பரவவிடும் மீமீஸ்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?

"தோனியின் தலைகொண்டான்" படத்திற்கு தோனியே பதிலளித்துவிட்டார், மைதானத்தில்...

வளர்வோம்! வளர்ப்போம்! மானுடத்தை!!!


___________________________________________________________


A Headless Chicken and its followers!!!

What sort of humans are we? I knew, from the history books, the practice of raping the women of the losing country by the victorious ones after the war. And now, I see such a medieval thought is still in our minds despite the changing attitude of people towards women. They are not materials to be possessed, but a fellow human being to be respected. They are not spoils of war, but part of our life.

It is barbaric to publish cheap memes about the Bangla girls, after the Asia Cup Final, as an act of revenge against an act of a mindless Bangladeshi.

Revenge has been taken, by Dhoni himself, in the field.

Sow Humanism!!!

Tuesday, January 14, 2014

தற்கொலை விடுதலை அல்ல...





வருணன் பூமியை முத்தமிட மறந்த நேரம்
ஏழை விவசாயி பூச்சிகொல்லியை முத்தமிட்டிருந்தான்
விவரம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கும் பாலகனையும்
தாயோடு சேர்ந்து அழுதுகொண்டிருக்கும் கருவையும் விட்டுவிட்டு...


Thursday, June 21, 2012

பணத்தின் மதிப்பினை கட்டாயம் உணர வையுங்கள்

பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?
சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.அவனுடைய அப்பா அந்த பணத்தை கசக்கி எறிந்தார் விட்டு போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை மறுபடியும் கசக்கி எறிந்தார் மூன்றாவது நாள் பணத்தை கசக்கி எரிய போகும் போது மகன் தாவி அதை வாங்கினான் . அப்போ அப்பா என்ன செய்கிறீர்கள் என்று கோபபட்டான் அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் கசக்கி எறியும் போது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.

ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.

படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?

இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.





இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :

பணத்தை மதியுங்கள்.

100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.

கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.

பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள்.
பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.
பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.
உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.

காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.
ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.

சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.
சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).

இதனால் என்ன என்ன பயன்?
தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்

டீன் பட்ஜெட்
இதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது? என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும். ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது.

உங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?
நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.

பணம் சம்பாதிப்பது சுலபமா? கஷ்டமா? என விளக்கு? உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன? பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள்? தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?
அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன?
தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா?
ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன்.
விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.



- Via FB

Thursday, December 22, 2011

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! அந்த பதினாறும் எவை?

௧. கல்வி
௨. அறிவு
௩. ஆயுள்
௪. ஆற்றல்
௫. இளமை
௬. துணிவு
௭. பெருமை
௮. பொன்
௯. பொருள்
௧0. புகழ்
௧௧. நிலம்
௧௨. நன்மக்கள்
௧௩. நல்லொழுக்கம்
௧௪. நோயின்மை
௧௫. முயற்சி
௧௬. வெற்றி

----------------------------------------------------
கலையாத கல்வி
கபடட்ற நட்பு
குறையாத வயது
குன்றாத வளமை
போகாத இளமை
பரவசமான பக்தி
பிணியற்ற உடல்
சலியாத மனம்

அன்பான துணை
தவறாத சந்தானம்
தாழாத கீர்த்தி
மாறாத வார்த்தை
தடையற்ற கொடை
தொலையாத நிதி
கோணாத கோல்
துன்பமில்லா வாழ்வு