கோடையின் முதல் அறிகுறியில் நம் மக்களின் ஏ.சி ஷோரூம் படையெடுப்பு
துவங்குகிறது. அதாவது, கோடை அனல் என்னும் பிரச்சனையை சமாளிக்க ஏ.சி என்னும்
ஆறுதல் மருந்து தேவைப்படுகிறது. மருந்தின் பக்கவிளைவாக, அடுத்த கோடை
மேலும் உக்கிரமாகிறது. காரணம் ஏ.சியின் காரணமாக வெளியாகும் ஓசோன்
அழிப்பான்களும் பசுமைகுடில் வாயுக்களும்.
நமது அடுத்தகட்ட நகர்வு
என்பது நோய்க்கான ஆறுதல் மருந்தாக இருக்கக்கூடாது. அது நோய்க்கான
காரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவதாக இருக்க வேண்டும். வெப்பத்தின்
கடுமைக்குக் காரணம் மரமும், தூய காற்றும், காற்றோட்டமும் இல்லாததே ஆகும்.
நல்ல காற்றோட்டம் உள்ள, மரங்கள் நிறைந்த வீட்டில் கோடையின் கனல்
தகிப்பதிலை. மரம் மழையை மட்டுமல்ல, குளுமையையும் தருகிறது.
ஏ.சி என்பது ஆறுதலாக இருக்கலாமே ஒழிய, மருந்தல்ல...
No comments:
Post a Comment