வருணன் பூமியை முத்தமிட மறந்த நேரம்
ஏழை விவசாயி பூச்சிகொல்லியை முத்தமிட்டிருந்தான்
விவரம் தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கும் பாலகனையும்
தாயோடு சேர்ந்து அழுதுகொண்டிருக்கும் கருவையும் விட்டுவிட்டு...
விளம்பரங்களில் தான் எத்தனை அழகு?
மொக்கைப் படங்களின்
நடுவில் வரும்
விளம்பரங்களில்தான்
எத்தனை அழகு?
வெயிலை சேமிக்க
இடம் தேடும் குழந்தை
சோப்புக்குள் அடைக்கும் தாய்
தான் தாயாக இருப்பதை
சிறு கோப்பையில்
காபி ஊற்றி
தெரியப்படுத்தும் மனைவி
தினமும் இனிப்பு கொடுத்து
காதல் சொல்லும் கணவன்
தோழியை தள்ளிவிட்டதற்காக
சேற்றை அடிக்கும் தோழன்
விளம்பரங்களில் தான் எத்தனை அழகு?